வண்டிய சரியா ஓட்டுனா… வாழ்க்கையை சரியா ஒட்டிடலாம்..! வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்த போக்குவரத்து சார்பு ஆய்வாளர்…!

Default Image

வாகன ஓட்டிகள் சிக்கனலில் காத்திருக்கும் போது, அவர்களின் காத்திருப்பை பயனுள்ளதாக மாற்ற, வாழ்க்கை தத்துவங்களை கூறி உற்சாகப்படுத்தி வருகிறார், போக்குவரத்து சார்பு ஆய்வளரான பழனியாண்டி.

மதுரையில் போக்குவரத்து சார்பு ஆய்வளரான பழனியாண்டி, வாகன ஓட்டிகள் சிக்கனலில் காத்திருக்கும் போது, அவர்களின் காத்திருப்பை பயனுள்ளதாக மாற்றும் வகையில், வாழ்க்கை தத்துவங்களை கூறி உற்சாகப்படுத்தி வருகிறார். இவரது இந்த  செயல், வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒலிபெருக்கி வாயிலாக வாகன  ஓட்டிகளிடம், எதைப்பற்றியும் கவலைப்பட கூடாது. இன்னைக்கு விட நாளைக்கு நல்லாருப்போம். நம்பிக்கை தான் வாழ்க்கை, விட்டுக்கொடுக்கனும்… அம்மாட்ட விட்டுக் கொடுக்கணும், அப்பாட்ட விட்டுக் கொடுக்கணும்… சம்சாரத்துக் கிட்ட காலம் பூராவும் விட்டுக் கொடுக்கனும்… அடுத்தவங்க கிட்ட மனைவிய விட்டுக் கொடுக்கவே கூடாது…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிக்னல் மாறுகிறது.

“வாங்க… பொறுமையா வாங்க… பொறுமையா வந்தா, வாழ்க்கை அருமையா இருக்கும்… வாங்கயா… என்னய்யா கொண்டு போக போறோம்… இருக்கிறதை வச்சு வாழ்ந்தா போதும்” என்று கூறி வாழ்க்கை தத்துவங்கள் வாயிலாக உற்சாகப்படுத்தி வருகிறார்.

இவரது செயலை பாராட்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு, ‘உங்களின் செயலுக்கு மக்களிடம், காவலர்கள் குறித்த நல்ல மதிப்பு உருவாகியுள்ளது. அதனை தொடர்ந்து செய்யுங்கள். மதுரைக்கு வருகையில் பதக்கம் அளித்து பாராட்டு தெரிவிப்பேன். இப்போது என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்