இந்த விஷயத்தில் திரு.பழனிசாமியும், திரு.ஸ்டாலினும் ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொள்வார்களா? – டிடிவி தினகரன்
பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக்கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
கடந்த பழனிச்சாமி ஆட்சியில் அரசு டெண்டர்களை எடுத்து புகாருக்குள்ளான திருப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திற்கே பொங்கல் பரிசு வினியோக டெண்டர் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் பெரிய அளவு கமிஷன் கைமாறி இருப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு தரமான பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைப்பது சந்தேகம்தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இதற்கு தி.மு.க அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? இல்லாவிட்டால் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் ஆகியவற்றில் திரு.பழனிசாமியும் திரு.ஸ்டாலினும் ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொள்வார்களா?’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு தி.மு.க அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? இல்லாவிட்டால் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் ஆகியவற்றில் திரு.பழனிசாமியும் திரு.ஸ்டாலினும் ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொள்வார்களா? (4/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 8, 2021