இன்றைய சூழலில் மக்களாலும், அரசாலும் இன்னொரு ஊரடங்கை சமாளிக்க முடியாது. எனவே, ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், தற்போது ஓமைக்ரான் வகை வைரஸ் பரவுவதால், தமிழகத்தில் இந்த வைரஸ் பரவாத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில்,இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஓமைக்ரான் வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்தவழி தடுப்பூசி செலுத்துவதையும் கொரோனா சோதனை செய்வதையும் தீவிரப்படுத்துவது தான் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். அந்த நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்!
ஓமைக்ரான் கொரோனாவை தடுக்க தடுப்பூசி மிகவும் அவசியம். அதனால் பொதுமக்கள் தயக்கமின்றி, தமிழக அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்கள், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஓமைக்ரான் பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்!
ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவத் தொடங்கினால் ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும். இன்றைய சூழலில் மக்களாலும், அரசாலும் இன்னொரு ஊரடங்கை சமாளிக்க முடியாது. எனவே, ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…