இன்னும் 2 மாதங்களுக்கு வெளியில் நடமாட வேண்டாம் – சுகாதாரத்துறை செயலாளர்
கொரோனா அச்சுறுத்தலால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இன்னும் 2 மாதத்திற்கு வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், திருத்தணி அரசு பொது மருத்துவமனை மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், கடை வீதிகளுக்கு சென்று பொதுமக்கள் முக கவசம் அணிந்திருக்கிறார்களா? சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘கொரோனாவின் தாக்கம் குறித்து மக்கள் இன்னும் முழுமையாக அறியாமல், அலட்சியத்துடன் செயல்படுவதாவும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இன்னும் 2 மாதத்திற்கு வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும், மீண்டும் கொரோனாவின் அடுத்த அலை வராமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில், கொரோனாவின் இரண்டாம் அலைக்கான முக்கியமான காரணம், தளர்வுகளின் போது பொதுமக்கள் எந்த நிலையான வழிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை என்றும், இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து, ரூ.10 கோடி வரை அபராதம் வசூலித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.