திமுக, அதிமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று ராமதாஸ் தவறுதலாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.
அதேபோல் வேட்பாளர்கள் கடந்த சிலநாட்களாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.பின்னர் வேட்புமனு மீதான பரிசீலனையும் செய்யப்பட்டது.
ஆனால் இது ஒருபுறம் மறுபுறம் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேபோல் இன்று திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாசிலையில் மக்களவை தொகுதி பொதுகூட்டம் நடைபெற்றது.இதில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவின் ஆரணி தொகுதி மக்களவை வேட்பாளார் செஞ்சி சேவல் ஏழுமலையை ஆதரித்து வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.அப்போது கூட்டத்தில் பேசுகையில் , திமுக, அதிமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று ராமதாஸ் தவறுதலாக கூறினார்.பின்னர் சுதாரித்த அவர் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சமாளித்து விட்டார்.இதனால் அங்கு இருந்த அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…