கட்சி மாண்பை மீறவில்லை , நோட்டீஸை திரும்ப பெறுங்கள் என்று திமுக நோட்டீஸ்க்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பதில் அளித்துள்ளார்.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம்.பின்னர் எம்எல்ஏ கு.க. செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், என்னுடைய தொகுதி விவகாரங்களை குறித்து தான் ஜே.பி.நட்டா அவர்களை சந்தித்தேன். திமுகவில் உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு..க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். நான் – பிஜேபியில் இணையவில்லை.தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்திக்க வந்தேன். நட்டாவை சந்தித்தத்தற்காக என்மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் என்று தெரிவித்தார்.
இதன் பின் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் ,கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதுடன் ,மேலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.டெல்லியில் இருந்து சென்னை வந்த திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் ராமர் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக சார்பில் அனுப்பிய கடிதம் இன்னும் வந்து சேர வில்லை. வந்ததும் .அதற்கு பதில் கடிதம் அனுப்புவேன். திமுகவில் இருக்க முடிய வில்லை என்பதால் பொறுப்பை நீக்கிக்கொள்ளுங்கள் என கூறி விட்டேன்.மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது கரணம் கிடையாது.குடும்ப அரசியல் காரணமாகவே திமுகவில் இருந்து விலகுகிறேன்.வயதாகிவிட்டது,உடல்நிலை சரியில்லை,பணம் இல்லை என்பதால் என்னை ஒதுக்கினார்கள் என்று பேசினார்.
இந்நிலையில் திமுக நோட்டீஸ்க்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பதில் அளித்துள்ளார்.அவரது பதில் கடிதத்தில், கட்சி மாண்பை மீறவில்லை .மற்ற கட்சி தலைவர்களை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை .கருணாநிதியை பாஜகவை சேர்ந்த மோடி நேரில் வந்து பார்த்தது அனைவருக்கு தெரியும். ஆகவே கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. இயற்கை நீதிக்கு விரோதமானது. ஆகவே என் மீதான குற்றச்சாட்டு நோட்டீஸை திரும்ப பெற வேண்டும். சட்டப்படி விசாரணை வைத்து நான் அறிக்கையில் கேட்ட விவரங்களை அளித்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…