விருப்பம் இல்லாவிட்டால் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டாம் – நீதிபதிகள் கருத்து!
தடுப்பூசிக்கு தடைகோரி மனு அளித்தவர் அதனை வாபஸ் பெற்றுள்ள நிலையில், விருப்பம் இல்லாவிட்டால் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கான தீர்வாக கடந்த 16 ஆம் தேதியிலிருந்து இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு கொண்டுள்ளது. இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போடா அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போடவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 30 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ள நிலையில் சிலருக்கு விளைவுகள் ஏற்படுவதால் இந்த தடுப்பூசிகள் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தை சேர்த்த திரு முருகன் என்பவர் ஓய்ந்த தடுப்பூசிக்கு தடை விதிக்க வேண்டும் என மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் விரும்பாவிட்டால் அவருக்கு தடுப்பூசி போட வேண்டாம் என கருத்து தெரிவித்ததை அடுத்து திருமுருகன் தனது மனுவை வாபஸ் வாங்கியுள்ளார்.