தடை செய்யப்பட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது – மாவட்ட ஆட்சியர்

சித்திரைப் பெருவிழா முன்னிட்டு அன்னதானத்துக்கு உணவுத்துறை அனுமதி அவசியம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகர் மண்டகப்படிகளில் அன்னதானம் வழங்குவதால் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள் உள்ளிட்டவை பாதுகாப்பான உணவாக செயற்கை சாயங்கள் எதுவும் சேர்க்காமல் வழங்க வேண்டும்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது. மேற்படி இடங்களில் சேரும் கழிவுகள் முறையாக சேகரித்து மாநகராட்சி தெரிவித்துள்ள இடங்களில் கொண்டு சேர்க்க வேண்டும். அதே போல் கோடை காலத்தை முன்னிட்டு, அமைக்கப்படும் தற்காலிக குளிர்பான விற்பனை இடங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவை தரமான குடிநீர் செயற்கை சாயங்கள் அற்ற உணவுகளை விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், சித்திரைப் பெருவிழா முன்னிட்டு, மண்டகப்படிகளில் மற்றும் இலவச அன்னதானம், பிரசாத வழங்கும் நபர்கள் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துரையின் அனுமதி பெறுவது அவசியம் என்றும் உணவு பாதுகாப்புத்துறை பதிவு சான்றிதழை ‘foscos’ என்ற இணையதளம் வாயிலாக பெறலாம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025