கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்…! கிஷோர் கே சாமி கைதை கண்டித்து அண்ணாமலை ட்வீட்…!
- அரசியல் தலைவர்களை அவதூறாக விமர்சித்த கிஷோர் கே சாமி கைது.
- கிஷோர் கே சாமியை கைது செய்ததை கண்டித்து, பாஜக மாநில துணை தலைவர் கே.அண்ணாமலை ட்வீட்.
சமூகவலைதள பக்கங்களான, ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணைய பக்கங்களில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி என்பவர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 10-ம் தேதி, இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து கிஷோர் கே சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.
கிஷோர் கே சாமியை கைது செய்ததை கண்டித்து, பாஜக மாநில துணை தலைவர் கே.அண்ணாமலை அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘திமுக குடும்பத்தை, அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா? பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு;திமுகவிற்கு அது இல்லை போல. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்.’ என பதிவிட்டுள்ளார்.
.@arivalayam குடும்பத்தை,அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது
இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா?பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு;திமுகவிற்கு அது இல்லை போல.
கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்#KishoreKswamy— K.Annamalai (@annamalai_k) June 14, 2021