இந்தி திணிப்பு !தமிழர்களை உரசிப் பார்க்காதீர்கள்-திமுக எச்சரிக்கை
திமுக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
அதில் ,மும்மொழித்திட்டம்’ என்ற பெயரில் தமிழர்களை உரசிப் பார்க்காதீர்கள்.தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து என்றால், எந்த நேரத்திலும் திமுக எதிர்க்கும் .ஜனநாயக வழியில் நின்று போராட திமுக தயங்காது. தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம்.
குடிநீர் பஞ்சத்தை போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தேவை.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறவும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.