பணத்துக்காக வாக்குகளை விற்றுவிடாதீர்கள்,வாக்குகளை விற்றால் கஷ்டப்பட வேண்டியது தான்…!கமல்ஹாசன்
பணத்துக்காக வாக்குகளை விற்றுவிடாதீர்கள்,வாக்குகளை விற்றால் கஷ்டப்பட வேண்டியது தான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ஓட்டுக்கு ரூ.5,000 வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ஒருநாளைக்கு தேநீர் கூட குடிக்க முடியாது. பணத்துக்காக வாக்குகளை விற்றுவிடாதீர்கள்,வாக்குகளை விற்றால் கஷ்டப்பட வேண்டியது தான். கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு அதிக அளவிலான ஆற்றல் உள்ளது என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.