ஆன்லைனிலும் மது விற்பனை செய்யக்கூடாது என்ற வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்தது தமிழக அரசு . அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் கொரோனா பரவும் என்றும் கருத்துகள் எழுந்தது . ஆனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் , ஊரடங்கு உள்ளபோது மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை என கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது.மேலும் ஆன்லைன் மூலம் மது விற்றுக்கொள்ளலாம் என கூறியது.பின்னர் உயர்நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டுள்ளது.மதுரை நுகர்வோர் அமைப்பு பொதுச்செயலாளர் சிங்கராஜ் என்பவர் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,சிங்கராஜ் தரப்பு வழக்கறிஞர் ஆன்லைன் மூலமாகவும் மதுவை விற்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதன் பின் உயர்நீதிமன்றம்,தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் முடிவை பொறுத்து இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று விசாரணையை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது .
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…