மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள் – மு.க.ஸ்டாலின்
கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நாளுக்குநாள் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோல்டன் பீரியட் என சொல்லப்படும் கொரோனா கால கட்டத்தை தமிழக அரசு வீணடிக்க வேண்டாம். 90 நாட்களை வீணடித்தது போல இனியும் வீணடித்து மக்களை வேதனை வலைக்கு வீழ்த்தி விடாதீர்கள். கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என வலியுறுத்தியுள்ளார்.