தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை
- பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய விமானப்படை.
- தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நேற்று (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.இதற்காக 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை தெரிவித்தது.மேலும் இந்த பகுதிகளில் இருந்த 3 தீவிரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.மேலும் விமானப்படையின் தாக்குதலில் தீவிரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்.
ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார்.இந்த தாக்குதல் 21 நிமிடங்கள் நீடித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 1971ம் ஆண்டுக்கு பிறகு எல்லையை தாண்டி சென்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு அளிப்பவர்களின் தலைமையில் நாடு உள்ளது .தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.