உயிரோடு விளையாட வேண்டாம்! முதலமைச்சர் உண்மை வேண்டும்-மு.க.ஸ்டாலின்
உயிரோடு விளையாட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நெல்லை வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு அளிக்கப்பட்ட பதிலில்,நெல்லையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 285 என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அரசு கூறிய தகவலின்படி 182 பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இருந்தது.எனவே அரசின் கணக்கில் 103 உயிரிழப்புகள்மறைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த செய்தியை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனாவால் நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். மறைக்கப்பட்ட மரணங்கள் 103. சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே விளக்கம் வரவில்லை. அடுத்த அதிர்ச்சி நெல்லையில்.உயிரோடு விளையாட வேண்டாம் முதலமைச்சர் உண்மை வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
#COVID19-ல் நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் #RTI தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். மறைக்கப்பட்ட மரணங்கள்:103!
சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே விளக்கம் வரவில்லை. அடுத்த அதிர்ச்சி நெல்லையில்!
உயிரோடு விளையாட வேண்டாம்! @CMOTamilNadu உண்மை வேண்டும் https://t.co/syjiJHpFGi
— M.K.Stalin (@mkstalin) September 5, 2020