கொரோனாவுக்கு சாதி, மதச்சாயம் பூச வேண்டாம்- முதல்வர்

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த 8 முதல் 20ம் தேதி வரை மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாநாட்டில் இந்திய மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்த 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்தவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்திருந்தார். இதுபோன்று பல மாநிலங்களில் மாநாட்டில் பங்கேற்று வந்தவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் பங்கேற்று வந்தவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ சுய பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் பல்வேறு சர்ச்சையான பேச்சுக்கள் கிளம்பியது. இதனால் கொரோனாவுக்கு சாதி, மதச்சாயம் பூச வேண்டாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது ஒரு நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றும் மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பின்னர் அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மதத்தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து  தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது என்றும் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கும் மற்றும் சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

14 mins ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

18 mins ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

52 mins ago

விடுமுறை இல்ல!! நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்.!

சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (09/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

2 hours ago

“கங்கை நதிக்கரை ஓரம்” காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.. குவியும் வாழ்த்து!

அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…

2 hours ago