மக்கள் நலனே முக்கியம்.! ஏப்ரல் 30 வரை டாஸ்மாக் திறக்கப்படாது.!
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதியில்லை.
நாடு முழுவதும் மதுபான கடைகளும் திறக்கப்படவில்லை. தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்துவருகிறது. இதனால், மது பிரியர்கள், சானிடைசர்கள் குடித்து மரணிக்கும் செய்திகளும், கள்ளச்சாராயம் காய்ச்சும் செய்திகளும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கிறது.
இதனால், தமிழகத்தில் ஏதேனும் கட்டுப்பாடுடன் மது கடைகள் திறக்கப்படுமா என மதுபிரியர்களிடையே கேள்வி எழுந்தது. இதுகுறித்து, தமிழக அமைச்சர் தங்கமணி தெரிவிக்கையில், மக்கள் நலனுக்காக ஏப்ரல் 30ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என கூறியுள்ளார்.