டி23 புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம். எனவே கொல்ல வேண்டாம்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் பகுதியில் அச்சுறுத்தி வரும் 13 வயதான புலி 4 பேரை கொன்றுள்ளது. ஏராளமான கால்நடைகளும் புலிக்கு இரையாகி உள்ளன. தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலை அளித்து வரும் புலியால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக வனத்துறையினர் வைத்த கூண்டுகளில் புலி சிக்காததால் சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்க்கு இன்று தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி23 புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம். எனவே கொல்ல வேண்டாம். புலியை பிடிக்கும் போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு கூடாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நீலகிரியில் உலாவும் டி23 புலியைக் கொல்லும் திட்டம் எதுவும் இல்லை உயிருடன் பிடிக்க உத்தரவு என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இந்நிலையில், புலியை பிடிப்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…