இன்ஸ்பெக்டரிடம் கட்சியினரை மிரட்ட வேண்டாம், நீங்கள் எதுவும் கூற வேண்டாம் எச்சரித்த அண்ணாமலை.
மதுரை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், நேற்று பாஜக சார்பில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தேனி ஆர்ப்பாட்டத்திற்கு செல்லும் வழியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்தார்.
பின், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதற்கு அவர் ‘அடுத்து இந்த பிரச்சினையை கையில் எடுப்போம்’ என்று தெரிவித்தார். பின் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க அண்ணாமலை அவர்கள் வந்தபோது இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் இதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறினார்.
அதனையடுத்து, அண்ணாமலை அவர்கள் காரில் காத்திருந்தார். பின் கட்சியினரின் வற்புறுத்தலால் காரிலிருந்து இறங்கியவர், இன்ஸ்பெக்டரிடம் ‘கட்சியினரை மிரட்ட வேண்டாம், நீங்கள் எதுவும் கூற வேண்டாம்’ என்று எச்சரித்துவிட்டு சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு சென்றார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…