‘கட்சியினரை மிரட்டவேண்டாம்’ – இன்ஸ்பெக்டரை எச்சரித்த அண்ணாமலை..!

Default Image

இன்ஸ்பெக்டரிடம் கட்சியினரை மிரட்ட வேண்டாம், நீங்கள் எதுவும் கூற வேண்டாம் எச்சரித்த அண்ணாமலை.

மதுரை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், நேற்று பாஜக சார்பில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் தேனி ஆர்ப்பாட்டத்திற்கு செல்லும் வழியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்தார்.

பின், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதற்கு அவர் ‘அடுத்து இந்த பிரச்சினையை கையில் எடுப்போம்’ என்று தெரிவித்தார். பின் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க அண்ணாமலை அவர்கள் வந்தபோது இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் இதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறினார்.

அதனையடுத்து, அண்ணாமலை அவர்கள் காரில் காத்திருந்தார். பின்  கட்சியினரின் வற்புறுத்தலால் காரிலிருந்து இறங்கியவர், இன்ஸ்பெக்டரிடம் ‘கட்சியினரை மிரட்ட வேண்டாம், நீங்கள் எதுவும் கூற வேண்டாம்’ என்று எச்சரித்துவிட்டு சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு சென்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்