கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களை அவமதிக்கூடாது- அன்புமணி வேண்டுகோள்
உயிரிழக்கும் மருத்துவர்களை அவமதிக்கும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்று பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய ஊழியர்கள் முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் மருத்துவரின் உடல் வேறு இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களை அவமதிக்கும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்று பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .மேலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.