போலீசார் தனிமையான இடத்திற்கு ரோந்து பணிக்கு செல்லும் போது கை துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஆடுகளை எடுத்துச் செல்வதை பார்த்துள்ளார். அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் பூமிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, கீரனூர் பள்ளப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து விசாரித்துள்ளார். அப்போது மணிகண்டன்(19) தன்னுடன் இருந்த இரண்டு சிறுவர்கள் உதவியோடு பூமிநாதனை கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மணிகண்டன் மற்றும் இரண்டு சிறுவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில்,இன்று காலை தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பூமிநாதன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியஅவர், ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் கைத்துப்பாக்கிகள் எடுத்து செல்லலாம். உயிருக்கு ஆபத்து என்கிறபோது துப்பாக்கிகளை பயன்படுத்த காவல்துறையினர் தயங்க வேண்டாம் என தெரிவித்தார்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…