#Breaking:தடை போட்டாச்சு…ஒகேனக்கல் அருவிக்கு செல்ல வேண்டாம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வரை விநாடிக்கு 6,000 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில்,அங்குள்ள அருவியில் குளிப்பதற்காக வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.அதன்படி,எண்ணெய் மசாஜ் செய்து ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றில் பலர் குளித்து மகிழ்ந்தனர்.மேலும்,சுற்றுலாப் பயணிகள் பலர் பரிசலில் பயணித்து காவிரி ஆற்றின் பல்வேறு பகுதிகளையும் கண்டு ரசித்தனர்.
குறிப்பாக,பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஒகேனக்கல் பகுதிக்கு வருகின்ற பயணிகளின் எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்,நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.குறிப்பாக,நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் மறு உத்தரவு வரும் வரை பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.