மாஸ்க் போடாமல் வெளியில் போகாதீர்கள் – கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ!

மாஸ்க் போடாமல் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தமிழகத்திலும் கொரோனாபாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியர்கள் என பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் 15க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாஸ்க் இல்லாமல் யாரும் வெளியில் செல்லாதீர்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024