மிரட்டி கேட்டால் மருந்தை தரக்கூடாது – அன்புமணி .!
உலகை மிரட்டி உருட்டி வரும் கொரோனா வைரசை தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர்.கொரோனாவால் தினமும் உயிரிழப்பும் , பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். மத்திய அரசு கடந்த மார்ச் 25 -ம் தேதி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது.
இதையெடுத்து சில நாடுகளுக்கு மட்டும் மத்திய அரசு மருந்து வழங்கி வருகிறது.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மருந்தை தங்களுக்கு ஏற்றுமதி செய்யாவிட்டால் பதிலடி தரப்படும் என மறைமுகமாக எச்சரிக்கையை இந்தியாவுக்கு விடுத்திருந்தார்.
பின்னர் இந்தியாவும் மனிதாபிமான அடைப்படையில் அமெரிக்காவிற்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.ஆனால்
அதிபர் மருந்து கேட்ட முறையை குறித்து பல தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் டிரம்ப் மருந்தை சாதாரணமாக கேட்டிருந்தால் நாம் மனிதாபிமான அடிப்படையில் தந்திருப்போம்.ஆனால் மிரட்டி கேட்டால் தரக்கூடாது என தெரிவித்துள்ளார்.