குவாரிகளில் மணல் அள்ள ஒப்பந்த அனுமதி தரக்கூடாது… மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!
Madurai High Court : குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அனுமதி வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
Read More – தொடரும் இழுபறி.. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு.! தமிழக காங்கிரஸ் திட்டவட்டம்.!
ராமநாதபுரம் திருவாடனை தாலுகாவில் உள்ள பாம்பார் ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கக்கோரி அம்மாவட்டத்தை சேர்ந்த சமாதானம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதாவது, பாம்பார் ஆற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் மணல் அள்ளப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.
Read More – நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில் ஈஷா மகாசிவராத்திரி வீடியோ!
இதுபோன்று, அனைத்து குவாரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் நடைபெற்றது.
Read More – இப்படித்தான் தேர்தலை நடத்த வேண்டும்.. தேர்தல் ஆணையரிடம் விசிக கோரிக்கை.!
அப்போது, குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது. மேலும், ஒப்பந்த புள்ளி அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது கனிமவள சட்டங்களுக்கு எதிரானது எனவும் மதுரை உயர்நீதிமன்றம் கிளை தெரிவித்தது.