இவ்வளவு அழகான வேட்பாளரை தேர்ந்தெடுக்க மறவாதீர்கள் : உதயநிதி ஸ்டாலின்
- திமுக வேட்பாளர் தமிழச்சி ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.
- இவ்வளவு அழகான வேட்பாளரை தேர்ந்தெடுக்க மறவாதீர்கள்.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும், தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். மேலும் அவர்களது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம், தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை, சைதாப்பேட்டையில், திமுக வேட்பாளர் தமிழச்சி ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இப்பிரச்சாரத்தில் அவர் கூறுகையில், ” இவ்வளவு அழகான வேட்பாளரை தேர்ந்தெடுக்க மறவாதீர்கள் என்றும், அழகு என்று சொல்வது, அவரது அழகு தமிழ், அன்பு, பாசம். மேலும் தமிழச்சி வெற்றி பெறுவது நிச்சயம் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.