காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி அனந்த குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்க தொடங்கினார். முதல் 31 நாள்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர்.
பின்னர் கடந்த 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து அத்தி வரதரை காண தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். மேலும் கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்ய வந்தனர்.
அத்திவரதரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என மாவட்டம்நிர்வாகம் கூறியுள்ளது.இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவு அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் அத்திவரதர் வைக்கப்பட்டு உள்ள அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளை கிணற்றின் துறைகளின் நீரை நிரப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பொற்றாமரைக் குளத்தில் உள்ள நீர் இளம்பச்சை நிறத்தில் உள்ளதால் பாசி படிய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப் பட்டது.இதை தொடர்ந்து அனந்தசரஸ் குளத்தில் பொற்றாமரைக் குளத்தின் நீர் நிரப்ப கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…