எங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் வருமான வரித்துறையினரை விட்டு முதுகில் குத்துகின்றனர் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
எனவே நேற்று இரவு 11 மணி அளவில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும்படை சோதனை நடத்த சென்றனர்.ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அங்கே 4 மணி நேரமாக காத்திருந்தனர்.பின்னர் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறை மற்றும் பறக்கும்படை மீண்டும் சென்றனர்.அதிகாலை சரியாக 3 மணி அளவில் சோதனை நடத்த சென்றனர். துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தினார்கள்.
அதேபோல் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் சோதனை நடத்தினார்கள்.சோதனைகுறித்து அதிகாரிகள் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
பின்னர் வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,எனது வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகள் மாற்றி மாற்றி பேசினர் என்று கூறினார்.
வேலூர் தொகுதியில் கதிர்ஆனந்தின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்றும் அதனை திசைதிருப்பவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது .தேர்தல் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன..? என்றும் போன மாதம் எங்கள் வீட்டிற்கு சோதனை நடத்த வந்திருக்கலாமே என்றும் தெரிவித்தார்.
எங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் வருமான வரித்துறையினரை விட்டு முதுகில் குத்துகின்றனர் என்றும் சோதனை என்ற பூச்சாண்டிக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தோ்தலில் வேலூா் தொகுதியில் திமுக பொருளாளா் துரைமுருகனின் மகன் கதிா் ஆனந்த் போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…