மத்திய அரசே எல்லாம் செய்யும் என எதிர்பார்க்காதீர்கள் – அண்ணாமலை
மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்.
கவர்ச்சிகரமாக பட்ஜெட்டை தயாரித்துவிட்டு மத்திய அரசே எல்லாம் செய்துவிடும் என எதிர்பார்க்காதீர்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வேலையின்றி இருப்பதாக சிபிஎஸ்சி கேள்வி விவகாரத்தில் விமர்சித்தார். தவறு செய்வோர் மீது பாரபட்சமின்றி எப்ஐஆர் பதிவு செய்தால் காவல்துறையை முதல் ஆளாக பாஜக வரவேற்கும் என்றும் கூறினார்.