இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது எனசென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டை சார்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பழைய மாமல்லபுரம் சாலையின் 2-வது திட்டத்துக்காக செங்கல்பட்டு கல்லேரியை மணல் மூலம் நிரப்புவதாகவும், இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு இயற்கையை அழித்து வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது. நீர் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதில் எந்த வித பாதிப்பும் இல்லாத வகையில் நீர்நிலைகள் மேல் பாலம் அமைத்து சாலை அமைக்கலாம் எனஆலோசனை வழங்கியுள்ளது.
மேலும், நீர்நிலைகளை தமிழக அரசு ஆக்கிரமிக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…