மாபெரும் போராட்டத்தை நடந்திடும் சூழ்நிலையை உருவாக்கிட வேண்டாம் – முக ஸ்டாலின்

Default Image

8 மாதங்களாக ஆளுநரின் ஒப்புதலை முதல்வர் எடுபிடி பழனிசாமி பெறாதது ஏன்? என்று முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு பணியில் 20% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றி அன்றே அரசு ஆணையும் பிறப்பித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

ஆரம்பம் முதல் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு முழுப்பயனும் கிடைக்க வேண்டும் என பட்டப்படிப்பு தகுதிக்கான அரசு பணிக்கு 10, 12-ஆம் வகுப்புகளையும், 10-ஆம் வகுப்பு தகுதிக்கான அரசு பணிக்கு 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்று சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தற்போது ஏறக்குறைய 8 மாதங்களாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. துறை அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்? சட்ட அமைச்சர்கள் ஏன் ஒப்புதல் பெறாமல் காலம் கழிக்கிறார்கள்? முதல்வர் பழனிசாமியின் அரசின் நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறாரா? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளார்.

குரூப்-1 பதிவிலேயே முறையாக இடஒதுக்கீடு செயல்படுத்தப்படவில்லை என்று தெரிந்தும், முதல்வர் உரிய அழுத்தம் தராமல், அரசியல் விளம்பரத்திற்காக ஒவ்வொரு ஊராக சுற்றி வருவது கண்டனத்துக்குரியது.

சட்டதிருத்தத்திற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். முதல்வர் நேரில் சென்று இந்த ஒப்புதலை பெற வேண்டும். காலம் கடந்தால், திமுக ஒரு மாபெரும் போராட்டத்தை நடந்திடும் சூழ்நிலையை உருவாக்கிட வேண்டாம் என்று அறிக்கையில் முக சட்டையின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்