என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்…!கமல்ஹாசன் வேண்டுகோள்
பிறந்தநாளில் வாழ்த்து பெறுவதை விட பிறக்க போகும் புதிய தமிழகத்திற்கு வாழ்த்து சொல்லவே விரும்புகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வரும் 7-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் ஆகும்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிவிப்பில், பிறந்தநாளில் வாழ்த்து பெறுவதை விட பிறக்க போகும் புதிய தமிழகத்திற்கு வாழ்த்து சொல்லவே விரும்புகிறேன் .இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம்.அதற்கு பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்ததானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.