சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியான செய்திகளை நம்ப வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

தமிழக மக்களை கொன்ற தொற்றிலிருந்து பாதுகாக்க பணியாற்றி வருகிறோம் இதுபோன்ற வதந்திகளை பரப்பி விட வேண்டாம்.

தமிழகம் முழுவதும் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை நான்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஐந்தாவது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர் அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள்,  கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஓய்வில்லாமல் பணியாற்றிவரும் செவிலியர்கள் மிகுந்த மன உளைச்சலோடு உள்ளதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. அது உண்மையில்லை.

செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் மிக சிறப்பான பணிகளால் தமிழகத்தில் 1500-க்கும் கீழ் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுவதால் முதல்வர் திங்கள் கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிட்டு இருக்கிறார். ஆனால் செவிலியர்களுக்கு மாற்றுப்பணி இருந்தால் அவர்கள் அந்த வாரத்தின் எந்த நாளிலாவது விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவத் துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். எனவே தமிழக மக்களை கொன்ற தொற்றிலிருந்து பாதுகாக்க பணியாற்றி வருகிறோம் இதுபோன்ற வதந்திகளை பரப்பி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்