முன்னதாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடாமல் இருந்தது.ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
தேர்வு எப்போது?:
இந்த சூழலில்,குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அறிவித்ததது. அதன்படி,கடந்த பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி,மே 21 ஆம் தேதி (சனிக்கிழமை) குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.மேலும்,ரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
தவறான அறிவிப்பு:
இதனிடையே,குரூப் 4 தேர்வு குறித்த தவறான அறிவிப்பு ஆணை இணையத்தில் வேகமாக வைரலாகி வருவதாகவும்,இது தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
குரூப் 4 தேர்வு எப்போது:
மேலும்,தேர்வாணையத்தின் அனைத்து அறிவிப்புகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும்,குரூப்-IV(குரூப் 4 தேர்வு)க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.அதனை https://www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…