பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி வருவாய் பெருக்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை.
ஓட்டுநர் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்துத் துறை செயலாளர் அவர்கள் அறிவுறுத்துதலின்படி செப்டம்பர் 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில் பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது.
இதனால் மா.போ.கழக அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, ஓட்டுநர், நடத்துநர்கள் கால அட்டவணைப்படி, நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்குதல் வேண்டும். வழித்தடம் மாறி வேறு பகுதிகளில் /சாலைகளில் பேருந்துகளை இயக்க கூடாது. அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தினை நிறுத்தி அங்கு காத்திருக்கும் பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி/இறக்கி செல்லுதல் வேண்டும்.
மா.போ.கழக பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி /இறக்கி செல்லுதல் வேண்டும். மாறாக பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடக் கூடாது. மா.போ.கழகத்தில், சாதாரண, விரைவு சொகுசு, குளிர்சாதன பேருந்துகளில் அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட சரியான பயணக் கட்டணங்களையே பயணிகளிடம் உரிய பயணச்சீட்டு அளித்து வசூலித்தல் வேண்டும்.
குறிப்பாக தவறான பயணக் கட்டணங்களை அதாவது பேருந்தில் ஏறிய பயணிக்கு குறைவான அல்லது அதிகமான பயணக் கட்டங்களை வசூலித்தல் கூடாது. மேலும், பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு உரிய சுமைக்கட்டண பயணச்சீட்டுகளை நடத்துநர் வழங்க வேண்டும். ஓட்டுநர், நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும். மாறாக பணியின்போது வீண்வார்த்தைகள் மற்றும் தவறான பேச்சுக்கள், கைகலப்பு போன்றவற்றினை அறவே தவிர்த்தல் வேண்டும்.
மேலும், பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி வருவாயை பெருக்கிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…