ஓபிஎஸ்-யிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்க கூடாது – அப்போலோ எதிர்ப்பு!
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ எதிர்ப்பு.
ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை:
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ மருத்துவமனை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வதிடம் விசாரணை நடத்தியது. அப்போது ஓபிஎஸ்-யிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டது.
ஓபிஎஸ் வாக்குமூலம்:
இதில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவிகளை அகற்ற கூறவில்லை என்றும் தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியானது எனவும் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
அப்போலோ மருத்துவமனை எதிர்ப்பு:
இதனை தொடர்ந்து, ஓபிஎஸ்-யிடம் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ மருத்துவமனை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அப்போலோ தரப்பு வழக்கறிஞர்:
சிகிச்சை குறித்து நேற்றே ஓபிஎஸ் தெரியாது என கூறியதால் அதுகுறித்து கேள்விகள் கேட்க கூடாது என அப்போலோ கூறியுள்ளது. ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்சனை தொடர்பாக ஓபிஎஸ்-யிடம் ஆணையம் கேள்வி எழுப்பியபோது, அப்போலோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மருத்துவ கேள்வி கேட்கும்போது முந்தைய சாட்சிகள் கூறிய கருத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்போது மருத்துவர்களை உடன் வைத்திருக்க வேண்டும் எனவும் அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் கூறினார். ஜெயலலிதாவுக்கு நோய் இருந்தது பற்றிய உங்களுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பலாம் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.