கோவில்களுக்குள் காதலர்களை அனுமதிக்க கூடாது.! இந்து மக்கள் கட்சி தலைவர் பகிரங்க பேச்சு.!
- தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரிய கோவில் மட்டுமில்லாமல் வேறு எந்த கோவிலுக்குள்ளும் காதலர்களை அனுமதிக்க கூடாது என தெரிவித்தார்.
தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சிறப்பாக ஏற்பாடுகளை செய்த கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்றும், சிவபெருமானையும், சிவலிங்கத்தையும் தவறாக பேசிய சீமானை பெரிய கோவிலுக்குள் அனுமதித்தது தவறு என கூறினார். மேலும் ரஜினியையும், விஜயையும் இணைத்து பேசக்கூடாது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ரஜினி வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது வருமானவரித்துறையே ரஜினிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து வருகின்ற 14-ம் தேதி தினத்தன்று காதலர் தினத்தை முன்னிட்டு பெரிய கோவில் மட்டுமில்லாமல் வேறு எந்த கோவிலுக்குள்ளும் காதலர்களை அனுமதிக்க கூடாது. அதேப்போல் பொது இடங்களிலும் காதலர் தின கொண்டாட்டத்தை அனுமதிக்ககூடாது என பகிரங்கமாக தெரிவித்தார். புனித தளங்களில் இதுபோன்று நிகழ்வு ஏற்படுவதால் சீர்குலைக்கும் வகையில் அமைகிறது என்று கூறினார். மேலும் வரும் 16-ம் தேதி தஞ்சையில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநாடு நடைபெறுகிறது. இதில் ஆன்மீக கொள்கை கொண்ட கட்சிகளை இணைக்கும் செயலில் இந்து மக்கள் கட்சி ஈடுபடும் மற்றும் ஆன்மீக சிந்தனை கொண்ட ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சராக வருவார் என தெரிவித்தார்.