நம்மை பிளவுபடுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள் – மு.க.ஸ்டாலின் பேச்சு
நம்மை பிளவுபடுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக உள்ளது.உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில்,கொரோனா நோய்தான் நம் எதிரி, கொரோனா நோயாளி அல்ல’ .துயரமான நேரத்தில் மக்களின் உயிரை பணயம் வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித்தள்ளுங்கள். சாதி மத அடிப்படையில் நம்மை பிளவுபடுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள் என்று பேசியுள்ளார்.
கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்! #TNFightsCorona https://t.co/HzysoPS0jG
— M.K.Stalin (@mkstalin) April 4, 2020