ஊரடங்கு நீடிப்பா.?- மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை.!
தமிழகத்தில் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 3 முறையும் பொதுமுடக்கத்தை நீடிக்க மருத்துவ நிபுணர் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் 4 வது முறையாக மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷ் உட்பட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் கொடுக்கும் தகவல் படியே தமிழகத்தில், 5-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..? அல்லது மீண்டும் தளர்வுகள் கொடுக்கப்படுமா..? என்பது தெரியும். பொதுமுடக்கத்தை நீடித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்றும் முதல்வர் கேட்டறிகிறார். ஏற்கெனவே மருத்துவ குழு பரிந்துரைப்படி, தமிழகத்தில் 4 முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.