டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு-இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் !

Default Image

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  சரணடைந்த நிலையில் இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

நடைபெற்ற விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி மற்றும் இடைத்தரகர் ஜெயக்குமார் குரூப் 4 மற்றும் குரூப்- 2ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இது தொடர்பாக சிவகங்கையில் வைத்து சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. 

நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.அவரது மனுவில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் எனக்கு தொடர்பில்லை.நீதிமன்றத்தில் மனு எந்த ஆதாரமும் இல்லாமல் என் பெயரை கெடுக்கும் நோக்கில் காவல்துறை செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்