தமிழக அரசு பணியாளர்களுக்கான தேர்வுகள் அனைத்தையும், இணைய வழியில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு துறைகளில் பணியாற்றும், பல்வேறு நிலை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் துறை ரீதியான தேர்வுகளில், ஊழியர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, டி.என்.பி.எஸ்.சி.,யால் எழுத்து தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை உள்ளதால், வரும் காலங்களில் நடக்க உள்ள துறை தேர்வுகளை, ஆன்லைன் முறையில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு நடத்தும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.
இதற்கிடையில், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய மூன்று தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பணியில், 59 காலியிடங்கள்; பொதுப்பணி துறை உதவி இயக்குனர் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணியில், 102 காலியிடங்களுக்கு, கடந்த ஜூன் மற்றும் நவம்பரில் தேர்வுகள் நடந்தன.இந்த தேர்வுகளின் முடிவுகள், நேற்று அறிவிக்கப்பட்டன.சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்களின் விபரங்களும் டி.என்,பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…