டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – ஒரே நாளில் 4 பேர் கைது

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி போலீசார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக கரூர் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 2 அரசு பணியாளர்களை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வில் இருவரும் முறைகேடாக தேர்ச்சிபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி போலீசார். பட்டுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஸ்வரன், முசிறியை சேர்ந்த விஏஓ விமல்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மட்டும் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025