டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் , காவலர் சித்தாண்டியின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
நடைபெற்ற விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி குரூப் 4 மற்றும் குரூப்- 2ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இவரைப்போலவே இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரும் செயலப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. எனவே காவலர் சித்தாண்டி மற்றும் ஜெயக்குமார் தலைமறைவாக உள்ளனர்.டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் தலைமறைவாக உள்ள ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி, மனைவி பிரியாவின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்துள்ளது சிபிசிஐடி போலீசார்.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…