திராவிட கட்சிகளின் ஆட்சி தயவில்தான் அன்புமணி மத்திய அமைச்சர் ஆனார் …!அமைச்சர் சி.வி.சண்முகம்
திராவிட கட்சிகளின் ஆட்சி தயவில்தான் அன்புமணி மத்திய அமைச்சர் ஆனார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சி தயவில்தான் அன்புமணி மத்திய அமைச்சர் ஆனார் . தமிழக அரசு நிவாரண பணியில் சிறப்பாக செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் அதை அரசியலாக்குகிறார்கள் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.