mk stalin and vanathi srinivasan [File Image]
இன்று சென்னையில் திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா, காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா உள்ளிட்டோர் அந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் ‘மகளிர் உரிமை மாநாடு என்ற பெயரில் மகளிர் வாரிசு உரிமை மாநாட்டை நடத்துகின்றனர் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது ” திமுக மகளிரணி சார்பில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அரசியல் வாரிசுகள். வாரிசு அரசியலில் கூட, பெண்களை பின்னுக்குத்தள்ளி, தங்கள்து ஆண் வாரிசுக்குதான் முக்கியத்துவம் அளிப்பதுதான் இண்டி கூட்டணி கட்சிகளின் அரசியல் பாரம்பரரியம்.
சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு! 5 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி!
நீண்டகால அரசியல் அனுபமும், திறமையும் கொண்ட கனிமொழி, இப்போது திமுகவில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் இருந்தும் மகன் உதயநிதியை தான் அரசியல் வாரிசாக்கியுள்ளார். பெண்களின் கனவான நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் பாஜக ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வீடுகள்தோறும் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், கழிவறை திட்டம், குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு என அடிப்படை வசதிகள் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியில் தான் சாத்தியமாகியுள்ளது. பெண்களுக்கு இந்த திட்டங்களால் நல்ல பலன் கிடைத்தது மட்டுமின்றி, அவர்களுக்கு கெளரவம், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை மாநாடு எனும் நாடகத்தை நடத்துவதால் என்ன பயன்? – அண்ணாமலை
55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் மகளிர் உரிமைக்காக எதுவும் செய்யாமல், தேர்தல் வருகிறது என்றதும் மகளிர் உரிமை மாநாடு என நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கி விட்டார். இனி எந்த நாடகமும் பெண்களிடம் எடுபடாது. “அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. மகளிர்க்கு உரிமைத் தொகை வழங்காமல், மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறார்கள்.
பாஜக ஆட்சி கர்நாடகத்தில் இருக்கும் வரை காவிரி பிரச்சனை இல்லாமல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ் எப்போது ஆட்சிக்கு வந்ததோ அதில் இருந்து காவிரி பிரச்னை வந்து விட்டது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் முடியாது என கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மறுக்கிறார்கள். அவர்கள் இருவரும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்.
சென்னை வந்துள்ள சோனியா, பிரியங்காவிடம், காவிரி மேலாண்மை வாரியம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உதவுமாறு முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி வலியுறுத்துவார்களா? தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்து விட்டு மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறது திமுக. இன்று திமுக நடத்துவது மகளிர் உரிமை மாநாடு அல்ல. மகளிர் வாரிசு உரிமை மாநாடு. தேர்தல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் நாடகம்” என கூறியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…