இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.இதனால் அனைத்து பொதுமக்களும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு அமைப்புகள் நேரடியாக பொதுமக்களுக்கு உதவிகளை மற்றும் நிவாரணங்கள் வழங்குவதற்கு தமிழக அரசு தடை விதித்தது.
தனிமனித இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவுவதைத் தடுக்கவே இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கி நோய் தொற்றுக்கு வழி வகுப்பது தவிர்க்க வேண்டும் . சமைத்த உணவுகள் நிவாரணப் பொருள்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது.
மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொருட்களை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் , மாநகராட்சியாக இருந்தால் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் உதவ தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் நாளை தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…