இன்று நடைபெறுகிறது திமுகவின் முப்பெரும் விழா…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திமுக சார்பில் இன்று முப்பெரும் விழா நடைபெறுகிறது.
ஒவ்வொரு வருடமும் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, திமுக கழகம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று நிகழ்வுகளையும் இணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா இன்று மாலை 5 மணி அளவில் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் ஆகியோர் பெயரில் ஐந்து விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தலைமை தாங்கி நடத்துகிறார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார். கொரோனா பரவல் காரணமாக முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டங்களிலும் காணொலிக் காட்சி வாயிலாக காணும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!
February 8, 2025![TNPSC MainExam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TNPSC-MainExam.webp)
வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!
February 8, 2025![ByeElection](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ByeElection.webp)
INDvENG: களமிறங்கும் ‘கிங்’ விராட் கோலி! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
February 7, 2025![ind vs eng 2 odi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-2-odi-.webp)