திமுக பின்வாங்குவது பாய்வதற்காக தான்…! இது புலியை பற்றி தெரியாத புண்ணாக்குகளுக்கு தெரியாது – கீ.வீரமணி

Default Image

பெண்களை இல்லத்தில் அடக்கி வைத்திருப்பது ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை என கி.வீரமணி பேட்டி. 

திருச்சி புத்தூர் பகுதியில் திராவிட கழக மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திராவிட மாடல் ஆட்சியில், உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் செய்துள்ளார்.

பெண்களை இல்லத்தில் அடக்கி வைத்திருப்பது ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை. பெண்ணடிமை பெண்களை வீட்டிலேயே முடக்கி வைத்திருப்பது உள்ளிட்ட அனைத்தையும் நீக்குவது தான் திராவிட மாடல் ஆட்சியாகும். திராவிட இயக்கங்களில் ஆதினம் கிடையாது. குறிப்பாக சூத்திரர்கள்  சன்னியாசியாக உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு செயல்படுத்தினால் எந்த ஆதினமும் இருக்க முடியாது.  திமுக ஒருபோதும் பின்வாங்காது. அப்படி பின் வாங்கினாலும் அது பாய்வதற்காக தானே தவிர தங்குவதற்காக அல்ல. அது புலியை பற்றி தெரிந்தவர்களுக்கு தான் தெரியும். புலியை பற்றி தெரியாத புண்ணாக்குகளுக்கு  தெரியாது என்று விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்