தனது குடும்ப உறுப்பினர்களை கட்சிக்குள் கொண்டுவருவது மட்டுமே திமுகவின் கொள்கை – செல்லூர் ராஜு

Default Image

திமுகவை எதிர்ப்பது மட்டும்தான் அதிமுகவின் கொள்கை  என செல்லூர் ராஜு பேட்டி. 

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் அதிமுக வலுவாக இருப்பதை பார்த்து அதிமுக உடைந்து உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.

திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர்  மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல தனது நிலைமை உள்ளது என தெரிவித்துள்ளார். இதுவரை எந்த முதல்வரும் எந்த காலகட்டத்திலும் பேசாத ஒன்றை முதல்வர் ஸ்டாலின் மனம் வெதும்பி பேசியுள்ளார்.

அதிமுகவிற்கு எந்த கொள்கையும் இல்லை என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் திமுகவை எதிர்ப்பது மட்டும்தான் அதிமுகவின் கொள்கை. திமுக மக்களுக்காக கொடுத்த திட்டங்கள் எல்லாம் குறுகிய நலத்திட்டங்கள் மட்டும்தான். தனது குடும்ப உறுப்பினர்களை கற்றுக் கொள்வது மட்டுமே திமுகவின் கொள்கை என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்